Thursday, April 5, 2012
Hindu .....Is that we live accordingly?
நான் இந்தியாவில் பிறந்த ஒரு முட்டாள் இளைஞன்,என் அறிவால் முட்டாள் ஆக்கப்படவில்லை,என் சிந்தனையால் ஆக்கபட்டுள்ளேன்....!!!நான் அப்படி என்ன சிந்தித்தேன் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும், என் மனதிலும் எழுந்தது, அதற்க்கான விடையைய் தேடி என் பயணம் துடர்ந்தது, நான் என்ன அப்படி பெரிய முட்டாள் தனமான சிந்தனையை முன்வைத்தேன் என்று இந்த சமூகம் எனக்கு இந்த முத்திரையை தந்து விட்டது...!! இந்த கேள்விக்கு விடை காணும் முன் என்னை பற்றிய ஒரு முகவரியை தர விரும்புகிறேன். நான் ஹிந்து மதத்தில் பிறந்தவன், நான் பிறந்தது ஒரு இடத்தில், வளர்ந்தது ஒரு இடத்தில் ஆனால் இரண்டும் இந்தியாவில் உள்ள இடம்தான், அரசியல் ஆதாயங்களுக்காக மூடர்கள்ளாக்கிய மக்கள் வாழும் இரண்டு மாநிலன்கிளில் உள்ள இடம் அது இரண்டும்....!!! என்னை கடவுள் புண்ணியத்தில் எந்த மதமும் மூளைசலவை செய்யாததாலோ ஏனோ நான் இன்னும் ஹிந்துவாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,என்னடா இது இந்தியாவில் ஹிந்துவாக பிறந்து விட்டு மதபிரிவினை வாதிகளின் கையில் சிக்கவில்லையா என்ற உங்கள் மனதில் எழும் ஆச்சர்யதை என்னால் உணர முடிகிறது....!!!! என்னையும் சீன்டியது, நானும் அவர்கள் பின்னால் சென்றேன், எப்படி என்கிறீர்களா நான் படித்த பள்ளி ஒரு கிறிஸ்துவ பள்ளி,எல்லா ஹிந்து குழந்தைகளுக்கு தரப்படும் மூளைச்சளைவியின் துடக்கம் இங்குதானே, ஆனால் என்னையும் என் தேவையையும் திருப்தி படுத்த அவர்களின் கடவுல்களால் இயலவில்லை, நான் பிறந்த என் மதத்தில் பிறந்த விவேகானந்தர், ஆதிசங்கரர், நாராயண குரு, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மஹா புருஷர்களின் சித்தாந்தங்களின் அளவில் கூட அவர்களின் கடவுள்கள் சிந்திக்கவில்லை என்பதை உணர்ந்தேன், என் அறிவு பசிக்கு தீனி போட என் ஹிந்து மதத்தால் மட்டுமே முடியும் என்று முடிவெடுத்து வாழ்ந்து வந்தேன்....!!! சாஸ்திரங்கள் சொல்லி தர யாரும் இல்லை,சித்தாந்தங்கள் சொல்லி தர யாரும் இல்லை,என்னை சரியான பாதையில் வழி நடத்த தன்னலமற்ற குருக்கள் கிடைக்க வில்லை,நான் சேரும் இடமெங்கும் என் சிந்தனையின் வீரியத்தை கண்டு அஞ்சியவர்களையும், நான் கேட்க்கும் கேள்விகள்க்கு பதில் அளிக்கதயங்கியவர்களையும் தான் பார்த்தேன், நான் யாரிடமும் மாணவனாக இல்லை என் அறிவுபசிக்கு தீனி போடும் அறிஞர்களையும் காண பெறவில்லை, ஒரு கட்டத்தில் இஸ்லாமிய சக்திகளும், கிருஸ்துவ சக்திகளும் என்னை துரத்தி வேட்டை ஆட தொடங்கியது.....!!!என் அடி மனதில் ஆழ பதிந்த ஒரு நம்பிக்கையை முறிக்க முற்பட்டதின் விளைய்வு நான் அந்த மதத்தின் தீவிரவாதி ஆனேன்,ஹிந்து மதம் என்பதால் நான் ஜிஹாத் என்று சொல்லி கொண்டு மனித உயிர்களை வேட்டையாடும் தீவிரவாதி ஆகவில்லை , மறித்து என் சிந்தனையில் உதித்த என் சொந்த சித்தாந்தங்களினால் என்னையும் நான் நேசிக்கும் என் மதத்தையும் சுற்றி ஒரு கண்ணாடி சுவரை கட்டி உயர்த்தினேன், நான் நம்பும் என் கடவுளின் அருளால் அந்த கண்ணாடி சுவர் இப்போதும் ஒரு இரும்பு கோட்டையாக என்னையும் என் நம்பிக்கையையும் காத்து வருகிறது....!!! புத்தகங்களை கண்டாலே வெறுப்புற்ற நான் இப்பொழுது புத்தகங்களை நேசிக்க தொடங்கியுள்ளேன்,படிக்கும் ஆர்வம் வெகுவாக வளர்ந்துள்ளது...!!!ஆனால் வாழ்க்கையில் வலுக்கடயமாக சுமத்தப்பட்ட சில தவிர்க்கமுடியாத கடமை சுமைகளால் நேரம் குறைவு, இப்படி சுற்றி திரிந்து வாழ்கை சக்கிரத்தின் வேகத்தில் தலை சுற்றி நிர்க்கும் ஒரு பேதையின் பிதற்றல் தான் இது, இத்தனைக்கும் நடுவில் நான் சிந்திக்கும் ஒரு விடை காணா வினா, என்னை இப்பொழுதும் துரத்தி கொண்டுதான் இருக்கிறது, இன்று ஹிந்து மதத்தை தீவிரமாக பின்பற்றும் மக்களின் நிலை என்ன என்பது தான் அது...!!! ஒரு கேவலமான ஈன பிரவியகதானே பார்க்கின்றனர், முகலாய திருடர்கள் முதல் வெள்ளைகார பெருச்சாளிகள் வரை திட்டம் போட்டு செய்த சதி இதற்க்காகதானே, ஒரு கலாசாரம் பிறந்த செல்வசெழிப்பு பெற்ற நாட்டிலே அந்த கலாச்சாரத்தை பின்பற்றுபவனை அந்நியனாக பார்க்கும் அந்த பார்வை எவ்வளவு கொடுமையானதாக இருக்கும் என்று என்னை பார்த்து புரிந்துகொள்ளலாம், எல்லாதிர்க்கும் மேல் என் கலாச்சாரம் எனுக்கு சொல்லி கொடுத்த மனிதநேயத்துக்கு மரியாதை தந்து மதபேதமின்றி என் நட்பு வட்டாரத்தை உருவாக்கி கொண்ட நான் இன்று என் முதுகிர்க்கு பின்னால் நின்று கொண்டு சதி வலை பின்னி கொண்டிருக்கும் என் நண்பர்கள் வட்டாரத்தை உணர்ந்துகொல்லாமல் இல்லை,இவன் எங்கு விழுவான் கை கொட்டி சிரிப்போம் என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் நண்பர் கூட்டம் அது ஒருபுறம், மதத்தின் பெயரால் அரசியல் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு மக்களை ஒரு கையாட்டு பொம்மையாக வைத்திருக்கும் தலைவர் கூட்டங்கள் ஒரு புறம், எவனோ ஒரு சதிகாரன் பின்னிய வலையோ இல்லை ஒரு மதத்தின் வீழ்சியால் ஏற்பட்ட கலாசார சீர்கேட்டாலோ உண்டான அறியாமையால் உருவான மூடனம்பிக்கைகளிலே வாழ்க்கை நடத்திவரும் முட்டாள் சமுதாயம் மற்றொரு புறம், இவர்களின் அறியாமையின் சூட்டில் குளிர்கான நினைக்கும் பகுதரிவாளிகளின் கூட்டம் ஒரு புறம், இந்த அறியாமையை பயன்படுத்தி ஆன்மீகம் என்ற பெயரில் நாகூசும் செயல்களை அரங்கேற்றி கொண்டிருக்கும் நடமாடும் கடவுள்களின் கூட்டம் ஒருபுறம், இப்படி வெவ்வேறு காரணங்களுக்காக மிருக கூட்டமாகி போன மனித கூட்டங்களுக்கு நடுவே மனிதனாக துடித்து போராடி கொண்டிருக்கும் ஒரு பேதை மிருகத்தின் பிதற்றல்கள் தான் இவை...!!! இப்படியிருக்க எனக்கு என் மதத்தை பற்றி ஏன் தெரிந்து கொள்ள இயலவில்லை, மற்ற மதத்தை பின்பற்றும் என் நண்பர்கள் எப்படி இவ்வளவு மதம் சார்ந்த வாழ்க்கை முறையின் சித்தாந்தங்களையும், அர்த்தங்களையும் தெள்ள தெளிவாக அறிவியலையும் ஒப்பிட்டு தெரிந்து வைத்துள்ளனர், என் பெற்றோர் கடமை தவிறிவிட்டார்களோ இல்லை என் பெற்றோருக்கே இதைப்பற்றி தெரியவில்லையா அப்படியானால் எங்கு எவருக்கு பிழைதிருக்கும், விடை காண முடியவில்லை, ஏன் என்று சிந்தித்தால் என் சரித்திரத்தை பொய்யாக்கி விட்டனர் கயவர்கள்...!!செரி மற்ற மதங்களில் ஆராய்ச்சி செய்ய எப்படி இவ்வளவு தொண்டு நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் முழுவீச்சில் செயல் பட்டு கொண்டிருக்க, எவ்வளவோஅறிவியல் ரகசியங்களை உள்ளடக்கிய ஹிந்து மதத்தை ஆராய ஒரு வேற்று மத வெள்ளை கார ஆரயிச்சியாலனும்,முகமதிய ஆரயிச்சியாலனும் மட்டுமா உள்ளான்...!!!அவன் என்னடா என்றால் ஒரு இடத்தில் நிற்காமல் என்னமோஅவன் விருப்பத்திற்கு வேதத்தில் அவர் பிறப்பார்,இவர் பிறப்பார் என்று கூறியுள்ளது, ஹிந்து மதத்தில் கூறியுள்ளது வெறும் பிதற்றல்கள் என்று ஏகத்துக்கும் புறம் கூறி பேதையான மக்களை மேலும் பேதை ஆக்குகிறான், இவனுக்கு நிகராக நின்று பேச இந்த ஹிந்து மதத்தின் சிறப்பை கூற ஒரு ஆள் கூடவா இல்லை அட இறைவா இவ்வளவு கேவலமாகவா தரம் தாழ்ந்து விட்டோம்??....!!அட நாம் வாழும் வாழ்க்கை முறையை தானே கேள்வி கேட்கிறான், நாம் படித்திருக்க வேண்டிய வேதங்களில் இருந்து எடுத்து தானே கூறுகிறான், நமக்கு தெரிந்ததை விடவா இதில் அவனுக்கு தெரிந்து விட போகிறது, எப்படி இருந்தும் நம்மால் அவன் கூற்று பொய் என்று தெரிந்தும் அதை பொய் என்று எடுத்துரைக்க இயலாமல் போனது என் குற்றமா, இல்லை இந்த மதத்தில் எனக்கு பிறவி தந்த கடவுளின் குற்றமா, இல்லை எவ்வளவு பட்டாலும் சூடு சொரணை இல்லாமல் நமக்கு என்ன நாம் நன்றாக இருந்தால் செரி என்று ஒட்டுமொத்த சுயநல ஹிந்துக்களின் குற்றமா??. இப்படி எவன் வேண்டுமானாலும்மேய்ந்து விட்டு கேவல படுத்தி செல்லும் அளவிற்கா நாம் நாதி அற்று போய் விட்டோம், மேலே நாட்டின் கலாசார தாக்கம் நம் கலாச்சாரத்தை சீரழித்து விட்டது என்று பிதற்றுக்கிரார்கள்...!!! எத்தனை இஸ்லாமிய நாடுகளில் மேற்கத்திய கலாச்சாரம் மேலோங்கி நிற்கிறது என்பதை பட்டியல் இட்டு கூறுங்கள் ஐயா, அப்படி எவரேனும் கூறினால் இதுவே என்னுடைய முதலும்,கடைசியுமான கட்டுரையாக இருக்கும்.....!!! எழுதுவதை நிறுத்திவிடுகிறேன். நம் கலாசாரத்தின் மீதும், பாரம்பரியத்தின் மீதும் நாம் கர்வம் கொள்ளாமல், பெருமை கொள்ளாமல் நம் பிள்ளைகளுக்கு நம் கலாச்சாரத்தின் பெருமையையும், சீர்சிரப்பையும் எடுத்துரைக்காமல் மறைத்துவிட்டு...!!! வெள்ளைக்காரன் சதி செய்துவிட்டான்,முகமதியன் திருடி விட்டான் என்று நடந்து முடிந்ததை சொல்லிகொண்டிருந்தால், கைவிட்டு போனவை திரும்பி வந்துவிடுமா என்ன??? நம்மிடமிருந்து திருடி சென்றார்கள் என்று ஆதாரத்துடன் நிரூபித்த கோஹினூர் வைரத்தையே இன்னும் மீட்ட பாடில்லை, அப்படியிருக்க அதற்க்கு முன் சூறையாடப்பட்ட செல்வதையா மீட்டெடுக்க முடியும்....!!! சென்றது சென்று விட்டது, இதுவரை உள்ளதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, அடுத்த தலைமுறையினருக்கு நம் கலாச்சாரத்தின் சிறப்பு, நம் பண்பாடு என்ன, நாம் யார், எங்கு எப்படி ஏமாந்தோம்,எமற்றபட்டோம் என்ற முகவரியையும் தகவலையும் தந்தால் தானே அவன் அதை கட்டி காப்பாற்றுவான், இல்லை இழந்ததை மீட்க பாடுப்டுவான் அதை விடுத்து மேலே நாடு வளர்ந்துள்ளது,அவன் மிக சிறப்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்று வாய் பிழந்து பார்ப்பது, பின் நம்மை நாமே தூற்றி கொள்வது, இப்படி ஒன்றுக்கும் உதவாததை செய்தும், பேசியும் கொண்டிருந்தால் அவன் நம்மை மீண்டும் அடிமை ஆக்காதான் முயல்வான். மேலே நாடுகளின் வளர்ச்சி நம்மிடமிருந்து திருடி சென்ற செல்வத்தை வைத்து அடைந்தது, நாமும் அவர்களை போல் திருட செல்வோமா??? அப்படி சென்றால் நாமும் அவனை போல முன்னேறி விடலாம். அளவில்லா வித விதமான உணவு பண்டங்களை ருசித்து உண்ணும் பழக்கமுடைய நம்மிடம் ரொட்டி துண்டை அறைவேக்காடோடு எடுத்து தந்து பிரபலம் அடைய செய்த நம் எதிராளி எவ்வளவு பெரிய ராஜதந்திரி என்பதை நாம் ஏன் இன்னும் புரிந்துகொள்ள மறுக்கிறோம், முகமதியனும்,வெள்ளையனும் நம்மை அடிமை படுத்த முதலில் கையாண்ட யுக்தி நம் மக்களின் கலாசார பண்பாட்டையும், மரபையும், மதத்தையும் மறக்க செய்வதுதான், இப்படி செய்வதன் மூலமாக மட்டும் தான் நம்மை அடிமை படுத்த முடியும் என்று தீர்க்கமாக முடிவெடுத்து தீட்டிய திட்டத்தில் நாமே இப்படி தீயில் சாகும் ஈசல் பூச்சிகளாக மாறி போனது எதனால்? என் தந்தை ஒரு கணவு கண்டார் அவர் மகனை மூடநம்பிக்கைகளும்,சாதிய ஏற்ற தாழ்வுகளற்ற தன்னலமற்ற சமூகத்தில் அவர் மகனை வளர்க்க வேண்டும் என்று, இதே கணவை இப்பொழுது நானும் காண்கிறேன்..!!!நான் வாழும் இந்த சமுதாயத்திற்கு மண்டியிட்டு கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான் என் மகனையும் கணவு காண வைத்து விடாதிர்கள்....!!!!நீர் நிறைந்த கண்களுடன் என் பிதற்றலை நிறுத்தி கொள்கிறேன்....!!! நன்றி, வந்தே மாதரம்....!!! குறிப்பு: இவ்வளவு கூறிய நான் வாழ்ந்து முடித்த வயோதிகன் அல்ல, எனக்கு வயது 24, இதை நான் ஏன் கூறினேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்...!!! கண்டிப்பாக ஆணவம் அல்ல, ஆதங்கம் தான
No comments:
Post a Comment